இந்தியாவின் ஏவுகணைகளை வாங்க பிரான்ஸ் ஆர்வம்: வலுப்பெறும் இராணுவ ஒத்துழைப்பு
இந்தியாவின் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம் காட்டியுள்ளது.
பிரான்ஸ் இராணுவ தலைவர் ஜெனரல் பியர் ஷில் (Pierre Schill), இந்தியாவின் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் சில ஆயுதங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற இந்திய இராணுவ நடவடிக்கையில் இந்த ஆயுதங்கள் காட்டிய செயல்திறன், பிரான்ஸ் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெனரல் ஷில், ஐ.நா. படை பங்களிப்பு நாடுகளின் தலைமை அதிகாரிகள், மாநாட்டில் பங்கேற்க புது டில்லிக்கு வந்தபோது, இந்திய இராணுவ தலைவர் ஜெனரல் உபேந்திரா திவேதி அவரை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு, மிண்ண்னு போர் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களில் கூட்டு வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய முடிவு செய்துள்ளன.
பிரான்ஸ், இந்தியாவின் பினாகா (Pinaka) ஏவுகணை அமைப்பினை (Long Range version) ஆராய்ந்துவருகிறது. இது துல்லியமான தாக்குதல்களையும், குறைந்த செலவில் அதிக செயல்திறனையும் வழங்கும் என பிரான்ஸ் அதிகாரிகள் ஏற்கெனவே பார்வையிட்டுள்ளனர்.
இரு நாடுகளும் Shakthi என்ற பெயரில் நடைபெறும் கூட்டு இராணுவ பயிற்சிகளை ஆண்டுதோறும் நடத்தும் திட்டத்தை தொடங்க விரும்புகின்றன.
இதில் UAV பயிற்சி, ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மின்னணு போர் பயிற்சிகள் அடங்கும்.
இந்த ஒத்துழைப்பு, இந்தியா-பிரான்ஸ் இராணுவ உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France India defence cooperation, Pinaka rocket system France, Operation Sindoor weapon review, India loitering munitions export, Gen Schill India visit 2025, Indo-French military partnership, Electronic warfare India France, Shakti joint army exercises