வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு
France has limited economic hit from drought, heatwaves: வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறைவே என தகவல் வெளியாகியுள்ளது.
வறட்சி, வெப்பத்தால் பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு குறிப்பிட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வறட்சியால் ஏற்பட இருக்கும் பாதிப்பு
பிரான்ஸ் எதிர்கொண்ட வறட்சி மற்றும் வரலாறு காணாத அளவிலான வெப்ப அலைகள், பிரான்ஸ் விவசாயத்துறை மீது குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பிரான்ஸ் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பிரான்ஸ், ஐரோப்பாவிலேயே பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகும்.
ஆனால், இம்முறை குறிப்பாக, பிரான்ஸ் எதிர்கொண்ட வறட்சி மற்றும் வரலாறு காணாத அளவிலான வெப்ப அலைகள் காரணமாக பலவகை பயிர்களின் அறுவடை பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மக்காச்சோள உற்பத்தி 35 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கதிர் அறுத்துப்போக மீதமிருக்கும் சோளத்தட்டை கால்நடைத் தீவனமாக பயன்படும் நிலையில், அதுவும் இம்முறை வழக்கத்தைவிட குறைவாகவே கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி மோசமான தகவல்கள் பல கிடைத்தாலும், மொத்தத்தில் பிரான்சின் பொருளாதார மட்டத்தைக் கணக்கிடும்போது, இந்த வெப்பம் மற்றும் வறட்சி, பிரான்சின் பேரியல் பொருளாதார (macroeconomic) மட்டத்தில் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்பு குறைவே என்கிறார்கள் துறைசார் அலுவலர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |