பிரான்சில் மீண்டும் அமுலுக்கு வரும் கட்டாய முகக்கவசம்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
பிரான்சில் சில மாவட்டங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மெல்ல, மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வரும் நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால், கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதன் காரணமாக நாட்டின் கடற்கரை மாவட்டங்களுக்கு வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதால், பிரான்சின் பல மாவட்டங்களிலும், முக்கிய கடற்கரை நகரங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் பல நகரங்களும், பல பெரும் நகரங்களும், முக்கியமாக நீஸ் நகரமும் இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.