பிரான்சில் எதிர்வரும் வாரங்கள் இப்படி தான் இருக்கும்... வெளிப்படையாக போட்டுடைத்த ஜனாதிபதி மாக்ரோன்
பிரான்சில் எதிர்வரும் சில வாரங்கள் கடினமாக இருக்கும் என ஜனாதிபதி மாக்ரோன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான உரையில் மாக்ரோன் இவ்வாறு கூறினார்.
கடந்த 24 மணிநேரத்தில் 2,32,200 கொரோனா பாதிப்பு பதிவான பிறகு நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் இடம்பெற உள்ளன.
இதனால் எதிர்வரும் சில வாரங்கள் கடினமாக இருக்கும், இது நாம் அனைவருக்குமே தெரிந்ததே என கூறினார்.
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்திய மாக்ரோன், தொற்றுநோய் பிடியிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி தான் ஒரே தீர்வு என குறிப்பிட்டார்.
மேலும், 2022ல் நாடு கொரோனா பிடியிலிருந்து மீளும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம், தற்போதைய சவாலை பிரான்ஸ் கடந்து செல்லும் என மாக்ரோன் கூறியுள்ளார்.