பக்கத்து நாட்டில் 138 பேரை மோசடி செய்த பிரெஞ்சுக் குடும்பம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம், அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் 138 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மோசடி செய்த பிரெஞ்சுக் குடும்பம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ’Bagdadi clan’ என அழைக்கப்படும் குடும்பம் ஒன்று, 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்துக்கும், 2025ஆம் ஆண்டு, ஜூலை மாதத்துக்கும் இடையில், 138 பேரிடம் பண மோசடி செய்துள்ளது.

அந்தக் குடும்பம், ஜெனீவாவில் வாழும் சுமார் 138 பேரிடம், சுமார் 3 மில்லியன் யூரோக்கள் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
போலி தொலைபேசி எண்கள் உதவியுடன், வங்கி மற்றும் பொலிஸ் அதிகாரிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு, குறிப்பாக முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றியுள்ளது இந்த கும்பல்.
இந்த மோசடி தொடர்பில், அந்தக் குடும்பத்துக்கு கூட்டாளிகளாக செயல்பட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள இந்த மோசடி தொடர்பில், பிரான்ஸ் மற்றும் சுவிஸ் அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |