பிரான்ஸ் மக்கள் விரும்பி உண்ணும் பயங்கர தோற்றமுடைய உயிரினம்: அது என்ன தெரியுமா?
பார்ப்பதற்கு உடல் முழுவதும் முட்களுடன் பயங்கரமாக காட்சியளிக்கிறது அந்த கடல்வாழ் உயிரினம்.
ஆனால், அது பிரெஞ்சு சமையலில் பிரபலமான ஒரு உணவாகும்!
அது என்ன உயிரினம்?
பிரெஞ்சு மக்கள் விரும்பி உண்ணும் அந்த உயிரினத்தின் பெயர், sea urchin. பொதுவாக, சொல் வழக்கில் இந்த உயிரினம் கடல் குச்சி என அழைக்கப்படுகிறது.
பிரான்சில், நீல கடற்கரை என அழைக்கப்படும் பகுதிக்கு, ஆண்டின் ஒவ்வொரு பிப்ரவரி மாதத்தின் மூன்று வாரங்களிலும் மக்கள் இந்த கடல் குச்சிகளை உண்பதற்காகவே கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.
இந்த கடல் குச்சியின் சுவையை வாயார புகழ்கிறார்கள் அதை உண்பவர்கள். சமையல் கலைஞர்களும் இந்த கடல் குச்சியைக் கொண்டு வகை வகையான உணவுகளை செய்து மக்களை அசத்துகிறார்கள்.
பின்குறிப்பு என்னவென்றால், இந்தியாவின் சில கிராமங்களில் இந்த கடல் குச்சி உயிரினத்தின் மீது உள்ள குச்சிகளை, சிலேட்டில் எழுத பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |