பிரான்சில் உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் விபரீதம்: சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
FIFA உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடும் போது நடந்த விபரீதத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தெற்கு பிரெஞ்சு நகரமான Montpellier-ல் பிரான்சின் வெற்றியைக் கொண்டாடிய மக்கள் கூட்டத்தின் போது, கார் மோதி 14 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெயர் வெளியிடப்படாத சிறுவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார், ஆனால் வாகனம் அருகிலேயே காணப்பட்டது. கார் சிறுவனை தாக்கியதற்கு என்ன காரணம் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
AP
மொராக்கோ அணிக்கு எதிராக புதன்கிழமை இரவு பிரெஞ்சு தேசிய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெருவில் மக்கள் கூட்டத்தின் அருகே ஆபத்தான முறையில் கார் ஓட்டப்பட்டதைக் காட்டும் வீடியோ ட்விட்டரில் வெளிவந்தது.
பிரான்சின் பிற இடங்களில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் முன்னேறியபோது, பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் மக்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டு கொண்டாடினர்.