பிரான்சில் ஆசிரியரை இனவெறி பிடித்தவன் என கத்திய மாணவன்! தந்தைக்கு நேர்ந்த கதி
பிரான்சில் ஆசியர் ஒருவரை இனவெறி பிடித்தவர் என்று மாணவன் கத்திய நிலையில், அவருடைய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரான்சின் Val d'Oise மாவட்டத்தின் Saint-Ouen-l'Aumône-வில் உள்ள Marcel Pagnol கல்லூரியில், கடந்த ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வரலாற்று பேராசிரியர் சாமுவேலுவிற்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வின் போது, அங்கிருந்த மாணவன் ஆசிரியர் ஒருவரை இனவெறி பிடித்தவர் என்று கத்தியுள்ளார்.
இதனால், குறித்த ஆசிரியர் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்க, கல்லூரி நிர்வாகம் அவருடைய தந்தையை அழைத்துள்ளது.
கல்லூரிக்கு வந்த அவரது தந்தை இந்த புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், கல்லூரி நிர்வாகத்திடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் அந்த மாணவன் மற்றும் ஆசிரியரின் பெயர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியாகவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.