பிரான்சில் நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ!
பிரான்சில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கி இருந்த 16 வயது மகனை, ரோபோட்டிக் இன்ஜினியர் தந்தை, அவர் உருவாக்கிய ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க செய்துள்ளார்.
மகன் ஆஸ்கார் வைத்த அன்பு கோரிக்கைக்கு இணங்க, இந்த பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார் ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா (Jean-Louis Constanza).
16 வயதான ஆஸ்கார் கான்ஸ்டான்சா "ரோபோ, எழுந்திரு" என உத்தரவை அளிக்க, அந்த ரோபோ, அவரைத் தங்கி மெதுவாக எழுந்து நிற்கிறது.
பின்னர், அவரது தோள்கள், மார்பு, இடுப்பு, முழங்கால்கள் மற்றும் கால்கள் ரோபோவுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அந்த ரோபோ நடக்கத் தொடங்குகிறது.
இன்னும் பத்தாண்டுகளில் உலகில் சக்கர நாற்காலிகளுக்கு தேவையே இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா, எழுந்து நடக்க முடியாதவற்களுக்காக பாரிஸ்-ல் இது போன்ற ரோபோக்களை தயாரிக்கும் Wandercraft என்னும் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார்.
உடல் இயக்கத்தை ஆதரிக்கும் மற்றும் உருவகப்படுத்தும் வெளிப்புற சட்டகமான Wandercraft-ன் exoskeleton, பிரான்ஸ், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவில் உள்ள டஜன் கணக்கான மருத்துவமனைகளுக்கு சுமார் 150,000 யூரோக்கள் (176,000 டொலர்) ஒரு பகுதிக்கு விற்கப்பட்டுள்ளது என கான்ஸ்டான்சா கூறினார்.