ஈரானுக்கு எதிராக ஐ.நா நீதிமன்றத்தில் பிரான்ஸ் வழக்கு
பிரான்ஸ் நாட்டவர்களுக்கு எதிராக வெறுப்பு கொள்கைள் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, ஈரானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் பிரான்ஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஈரானுக்கு எதிராக பிரான்ஸ் வழக்கு
பிரான்ஸ் நாட்டவர்கள் பலரை கைது செய்தது, தடுப்புக் காவலில் வைத்தது மற்றும் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னணியில், தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் தனது கடமைகளை தீவிரமாகவும் மீண்டும் மீண்டும் மீறுவது தொடர்பில்,
பிரான்ஸ் இன்று சர்வதேச நீதிமன்றத்தில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது என நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரான்ஸ் நாட்டவர்களான Ms. Cecile Kohler மற்றும் Mr. Jacques Paris ஆகிய இருவரை தடுப்புக்காவலில் வைத்திருப்பது தொடர்பில் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |