Google-க்கு 500 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ்!
பிரபல தேடுதல் வலைதள நிறுவனமான கூகுளுக்கு பிரான்ஸின் போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு 500 மில்லியன் யூரோ (சுமாா் ரூ.4,400 கோடி) அபராதம் விதித்துள்ளது.
பிரான்ஸ் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை, தங்களது தேடுதல் வலைதளத்தில் Google பயன்படுத்துவது தொடா்பாக பிரான்ஸின் போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு விசாரணை நடத்தி வந்தது.
அந்த விசாரணையின் முடிவில், கூகுளுக்கு 500 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதவிர, செய்திகளைச் சேகரிக்கும் நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் எந்த வகையில் இழப்பீடு வழங்கப்போகிறது என்பது குறித்த செயல்திட்டத்தை 2 மாதங்களுக்கு வெளியிட வேண்டும் என்று ஒழுங்காற்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால், நாளொன்றுக்கு 9 லட்சம் யூரோ (சுமாா் ரூ. 79 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.