பாரிஸின் மிகப்பெரிய உணவுச் சந்தையில் பயங்கர தீ விபத்து., நகரம் முழுக்க சூழ்ந்த கரும்புகை
பாரிஸில் விமான நிலையம் அருகே உள்ள மிகப்பெரிய மொத்த வீரப்பனை சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சந்தையில் 12,000-க்கும் அதிகமான மக்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் Orly விமான நிலையம் அருகே அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான ருங்கிஸ் சர்வதேச சந்தையின் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
7000 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியது மற்றும் பாரிஸ் முழுவதும் இருண்டுபோகும் அளவிற்கு கரும்புகை எழுந்தது.நூறு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
மேலும் பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள மக்களை அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு தீயணைப்பு வீரர்கள் வலியுறுத்தினர்.
234 ஹெக்டேர் பரப்பளவுடன் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மொத்த விற்பனைச் சந்தையில், 12,000க்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். இருப்பினும், இந்த விபத்தில் இதுவரை காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
ருங்கிஸ் சர்வதேச சந்தை (Rungis International Market) பாரிஸின் முதன்மையான சந்தையாகும், முக்கியமாக உணவு மற்றும் தோட்டக்கலைப் பொருட்களுக்கான சந்தையாகும், இது தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ருங்கிஸின் கம்யூனில் அமைந்துள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய மொத்த விற்பனை உணவு சந்தையாகும்.
RUNGIS - There is only one warehouse burning and firefighters are bringing the blaze under control.
— We Are Protestors (@WeAreProtestors) September 25, 2022
The flames are impressive but the whole International Market is not on fire. – at Rungis International Market pic.twitter.com/xzW3tkUTa1
மேலும் பிரான்ஸ் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள், கடல் உணவுகள், இறைச்சிகள், பால் பொருட்கள் மற்றும் பூக்களால் நிரப்பப்பட்ட கிடங்குகள் இந்த மொத்த வீரப்பனை சந்தியில் உள்ளன.
பிற்பகலில் தீ கிட்டத்தட்ட கட்டுக்குள் கோடுநுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்களின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பழம் மற்றும் காய்கறிக் கிடங்கில் எப்படி தீப்பிடித்தது என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Another video from the fire in Paris, where Rungis, a large market, caught fire — no information about casualties so far pic.twitter.com/Sy1bF3BLAQ
— ??Jacob??Charite?? (@jaccocharite) September 25, 2022
JUST IN ? Plumes of smoke after fire seen near Orly airport in Paris, France pic.twitter.com/Wt9bf02lLS
— Insider Paper (@TheInsiderPaper) September 25, 2022