கனேடிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் பிரான்ஸ்: அறிவித்த ஜனாதிபதி மேக்ரான்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பற்றியெரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் உதவும் பொருட்டு பிரான்ஸ் தீயணைப்பு வீரர்களை அனுப்பிவைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
நூறு தீயணைப்பு வீரர்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தமது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவு செய்துள்ளார். எங்கள் நூறு தீயணைப்பு வீரர்கள் தங்கள் கியூபெக் தோழர்களுடன் சேர்ந்து தீயை அணைக்க தயாராகி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கியூபெக் முதல்வரும் நன்றி தெரிவிப்பதாக தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கனடா நாட்டு மக்கள் சார்பாக பிரான்ஸ் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Le Canada fait face à de terribles incendies.
— Emmanuel Macron (@EmmanuelMacron) June 4, 2023
La France est solidaire. Une centaine de nos soldats du feu se préparent à aller combattre les flammes aux côtés de leurs camarades québécois. Des experts sont aussi mobilisés.
Amis canadiens, les renforts arrivent.
மேலும், நமது இரு நாடுகளும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வலுவான பங்காளிகள், இந்த உறவு முன்னெப்போதையும் விட முக்கியமானது என பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் மட்டும் 141 பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருகிறது. தீயணைப்பு வீரர்களுடன் ராணுவமும் தற்போது களமிறங்கியுள்ளது. இதுவரை 475 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இருப்பதாக மாகாண நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பாரிய காட்டுத் தீ
ஒன்ராறியோ எல்லையில் அமைந்துள்ள Abitibi-Temiscamingue பகுதியில் இருந்து 10,000 மக்கள் வரையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனடாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் இருந்தும் உதவி பெறும் ஒப்பந்தங்களை முன்னெடுத்துள்ளனர்.
@global
மட்டுமின்றி, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிறப்பு நிபுணர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் இதுவரை ஆல்பர்ட்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆல்பர்ட்டா மற்றும் நோவா ஸ்கோடியாவிலும் சமீபத்தில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டது. நோவா ஸ்கோடியாவில் ஏற்பட்ட தீ ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து ஆல்பர்ட்டாவில் அமுலில் இருந்த அவசர நிலை ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகிறது.