கத்தார் உலகக் கோப்பை... கடும் குழப்பத்தில் பிரான்ஸ் அணி: இதுவரையான போராட்டம் வீணாகுமா?
கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இனி சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில் பிரான்ஸ் அணியினர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாக வெளியான தகவல் மொத்த ரசிகர்களையும் அதிரவைத்துள்ளது.
வீணாகிவிடுமா என்ற கேள்வி
கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது ஞாயிறன்று கோலாகலமான நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோத இருக்கின்றன.
ஆனால் பிரான்ஸ் அனியின் இதுவரையான போராட்டங்கள் அனைத்தும் வீணாகிவிடுமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பில் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் செயலுக்கு கொண்டுவர முடியாதவகையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 5 முக்கிய வீரர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அணியின் துணைத்தலைவரான ரபேல் வரனேவும் அதில் ஒருவர். இந்த நிலையில் அணியினருக்கான மருத்துவர் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மர்ம நோயால் பாதிக்கப்பட்ட
சிலர் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். Kingsley Coman, Adrien Rabiot, Dayot Upamecano ஆகியோர் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அரையிறுதி ஆட்டத்தில் களமிறக்கப்படவில்லை.
@getty
தற்போது ரபேல் வரனே மற்றும் Ibrahima Konate ஆகிய இருவரும் காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளனர். இருவரும் வேகமாக குணமடைந்து அணிக்கு திரும்பினால், அது பிரான்ஸ் அணிக்கு அசுர பலம் சேர்க்கும்.
மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் நட்சத்திரங்களான இருவரும் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.