300 பொலிஸார்.. 7 ஹெலிகாப்டர் மூலம் தேடப்பட்டு வந்த பிரான்ஸை உலுக்கிய நபர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
பிரான்ஸில் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பியோடிய முன்னாள் இராணுவ வீரரை 36 மணிநேர போராடத்திற்கு பின் பிரான்ஸ் பொலிஸ் சுட்டு பிடித்துள்ளது.
Dordogne மாகாணத்தில் உள்ள Lardin-Saint-Lazarre பகுதியில் மர்ம நபர் ஒருவர் பொலிசாரை நோக்கி துப்பக்கியால் சுட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பியோடிய ஆயுதமேந்திய நபர் முன்னாள் இராணுவ வீரர் என தகவல் தெரியவந்தது.
முன்னாள் மனைவியை துன்புறுத்தி குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் குடும்ப வன்முறை குற்றத்திற்காக 4 முறை குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்.
தப்பியோடிய நபரை தேடும் பணியில் பொலிஸ் படை மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.
மேலும், மறுஅறிவிப்பு வரும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என Dordogne மாகாணம் அறிவித்தது.
இதனையடுத்து, தப்பியோடிய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டது.
தப்பியோடிய ஆயுதமேந்திய முன்னாள் இராணுவ வீரர் 29 வயதான DUPIN TERRY தகவல் வெளியிடப்பட்டது.
24 மணிநேரங்கள் கடந்தும் ஆயுதமேந்திய நபர் பிடிப்படாததால் தேடும் பணியில் 300 பொலிஸ் படையினர் மற்றும் 7 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
இந்நிலையில், 36 மணிநேர போராட்டத்திற்கு பின் DUPIN TERRY பிடிப்பட்டதாக பிரான்ஸ் பொலிஸ் அறிவித்துள்ளது.
இதன் போது DUPIN TERRY பொலிசாரரை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கைது நடவடிக்கையின் போது பொலிசார் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள DUPIN TERRY-க்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. இன்னும் சில மணிநேரங்களில் Dordogne மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.