பிரான்சில் புகழ் பெற்ற தேவாலயத்திற்கு குவிந்த நிதி! எத்தனை மில்லியன் தெரியுமா?
பிரான்சில் நோர்து டேம் தேவாலய திருத்தப்பணிகளுக்காக 840 மில்லியன் யூரோக்கள் நன்கொடை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உலகப்புகழ் பெற்ற நோர்து-டேம் தேவாலயத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில் இருந்த இரண்டு கோபுரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால், இந்த தேவாலய திருத்தப்பணிகளுக்காக நன்கொடைகள் கோரப்பட்டது.
இதைத் தொடர்ந்து இங்கு, திருத்தப்பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை 842.8 மில்லியன் யூரோக்கள் நன்கொடை சேர்ந்துள்ளதாக நோர்து டேம் தேவாலயத்தின் புணரமைப்பு பொறுப்பாளர் Jean-Louis Georgelin தெரிவித்துள்ளார்.
இதில் 232 மில்லியன் யூரோக்கள் fondation du patrimoine மூலமாகவும், 31 மில்லியன் Fondation de France மூலமாகவும் 7.8 மில்லியன் யூரோ Center des monuments nationaux மூலமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2024-ஆம் ஆண்டு இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு, மீண்டும் தேவாலயம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.