பிரான்சில் வரும் ஜுலை 1 முதல் இதன் விலை அதிகரிப்பு? வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் வரும் ஜுலை 1-ஆம் திகதி முதல் எரிவாயு கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில், கொரோனா பரவல் காரணமாக, நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், வரும் ஜுலை 1-ஆம் திகதி முதல் எரிவாயு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இது கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரி இல்லாமல் துல்லியமாக 9.96 சதவீத்ததால், எரிவாயு கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. உலக சந்தையில் எரிவாயு கட்டணம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த கட்டண உயர்வை பிரான்ஸ் மக்கள் சந்திப்பதாக Commission de régulation de l'énergie (CRE) அறிவித்துள்ளது.
இது போன்று ஒரே முறை கிட்டத்தட்ட 10 சதவீத விலை அதிகரிப்பை பிரான்ஸ் முன்னர் எப்போதும் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.