இனிமேல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடையில்லை! குஷியில் இளைஞர்கள்
பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் இனிமேல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டி பிடித்து முத்தம் கொடுப்பது பழக்கம். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கம்.
அப்போது ஒருவிதமான சத்தத்தையும் எழுப்புவார்கள். அது மட்டுமல்ல இளம் ஜோடிகள் என்றால் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்து கொள்வார்கள். ஆனால் கொரோனா காலம் என்பதால் இந்த வழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் பொதுமக்கள் தங்கள் கலாசாரத்தை கடைபிடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் 70 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். எனவே பிரான்ஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
அதில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்வதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அந்த நாட்டில் உள்ள இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.