இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கும் நாடு
பிரான்ஸ் நாடு, தன் நாட்டு மக்களில் இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் வழங்க உள்ளது.
இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ்
பிரான்சில் வாழும் இரண்டு மில்லியன் குடும்பங்களுடைய வங்கிக் கணக்கில் நேற்று முதல் ஒரு போனஸ் தொகை கணக்கு வைக்கப்பட்டுவருகிறது.

பிரான்சிலுள்ள குறைவருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகள் வழங்கும் அமைப்பான, caisses d'allocations familiales என்னும் அமைப்பிலிருந்து நிதி உதவி பெறும் குடும்பங்கள் முதலான குடும்பங்களுக்கு, கிறிஸ்துமஸ் நேரத்தில் உதவியாக இருக்கும் என்பதற்காக இந்த போனஸ் வழங்கப்படுகிறது.
இந்த போனஸுக்காக மக்கள் விண்ணப்பிக்கவேண்டியதில்லை, தானாகவே அது அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
போனஸ் தொகை எவ்வளவு?
தனி நபருக்கான போனஸ், 152.45 யூரோக்கள், தம்பதியருக்கான போனஸ் 228.68 யூரோக்கள்.
ஒரு குழந்தையுடைய தனி நபருக்கான போனஸ், 228.68 யூரோக்கள், ஒரு குழந்தையுடைய தம்பதியருக்கான போனஸ் 274.41 யூரோக்கள்.

இரண்டு குழந்தைகள் உடைய தனி நபருக்கான போனஸ், 274.41 யூரோக்கள், இரண்டு குழந்தைகள் உடைய தம்பதியருக்கான போனஸ் 320.15 யூரோக்கள்.
மூன்று குழந்தைகள் உடைய தனி நபருக்கான போனஸ், 335.39 யூரோக்கள், மூன்று குழந்தைகள் உடைய தம்பதியருக்கான போனஸ் 381.13 யூரோக்கள்.
நான்கு குழந்தைகள் உடைய தனி நபருக்கான போனஸ், 396.37 யூரோக்கள், நான்கு குழந்தைகள் உடைய தம்பதியருக்கான போனஸ் 442.11 யூரோக்கள்.
ஐந்து குழந்தைகள் உடைய தனி நபருக்கான போனஸ், 457.35 யூரோக்கள், ஐந்து குழந்தைகள் உடைய தம்பதியருக்கான போனஸ் 503.09 யூரோக்கள்.
ஐந்துக்கு மேல் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்கு 60.98 யூரோக்கள் வீதம் போனஸ் வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |