புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் பிரான்ஸ் தரப்பிலிருந்து உருவாகியுள்ள புதிய சிக்கல்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் திட்டத்துக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் பிரான்சின் பங்கு
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, பெரும் தொகை செலவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில், பிரான்ஸ் அதிகாரிகள் கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோர் படகுகளை கத்தியால் கீறி அவர்கள் தொடர்ந்து பயணிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையைத் துவக்கினார்கள்.
ஆனால், அந்த நிலை நீடிக்குமா என்பது தற்போது சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.
பிரான்சில் அரசியலில் உருவாகியுள்ள குழப்ப நிலை
ஆம், பிரான்சில் தற்போது ஆளும் அரசே நீடிக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது.
உள்நாட்டு அரசியல் காரணங்களால், செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ.
விடயம் என்னவென்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேய்ரூவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வாக்கெடுப்பில் பேய்ரூ தோல்வியை சந்திப்பாரானால், பிரான்ஸ் அரசு கவிழும் அபாயம் உருவாகியுள்ளது.
அப்படி அரசு கவிழுமானால், பிரான்ஸ் ஜனாதிபதி அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை காபந்து அரசே நீடிக்கும்.
காபந்து அரசைப் பொருத்தவரை, வழக்கமான, முக்கியமான பணிகளைத் தொடருமேயொழிய, சிறுபடகுகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாது.
ஆக, பெரும் செலவு செய்தும், ஒப்பந்தங்கள் செய்தும், பிரான்ஸ் அரசியலில் உருவாகியுள்ள பிரச்சினையால், ஸ்டார்மரின் சிறுபடகுகளைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |