இனி பிரான்சில் செல்வந்தர்களுக்கு இந்த வசதி கிடையாது
சில விமானங்களை முழுமையாக தடை செய்ய பிரான்ஸ் முடிவு செய்துள்ளதுடன், செல்வந்தர்கள் தனி விமானங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட உள்ளது.
குறைந்த தூர பயண உள்நாட்டு விமானங்கள் ரத்து
பிரான்ஸ் நாட்டின் 2021ஆம் ஆண்டின் பருவநிலை சட்டப்படி, அந்நாடு, குறைந்த தூரம் பயணிக்கும் உள்நாட்டு விமானங்களை தடை செய்ய எடுத்துள்ள முடிவுக்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, இரண்டு நகரங்களை இணைக்க 2.5 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே தேவைப்படும் பயணங்கள், மற்றும் அந்த நகரங்களை இணைக்க ரயில்கள் உள்ளன என்னும் பட்சத்தில், அத்தகைய குறைந்த தூர விமான சேவைகள் பிரான்சில் ரத்து செய்யப்பட உள்ளன.
@Nathan Laine/Bloomberg
இனி பிரான்சில் செல்வந்தர்களுக்கு இந்த வசதி கிடையாது
அத்துடன், குறைந்த தூரம் பயணிக்க செல்வந்தர்கள் தனி விமானங்களை பயன்படுத்தவும் பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் ஆற்றல் பிரச்சினைகள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக செலவுகளை குறைக்க வழிதேடிக்கொண்டிருக்கும் நிலையில், செல்வந்தர்கள் தனி விமானங்களை பயன்படுத்துவதை இனியும் சகித்துக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beaune.
இந்த சட்டம் கடந்த ஆண்டே அமுலுக்கு வந்துவிட்டாலும், தடை அமுலுக்கு வர சிறிது காலம் பிடிக்கும்.
முடிந்தவரை சீக்கிரமாக இந்த தடையை அமுல்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார் Clément Beaune.