பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய தடை! வெளியான முக்கிய அறிவிப்பு
புத்தாண்டை முன்னிட்டு பிரான்ஸ் அரசாங்கம் புதிய தடைகளை அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் மாறுபாட்டால் அதிகரித்து வரும் கொரோனா பரவல்களால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பல ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
பிரான்சில் வியாழன்று கொரோனா தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில், பிரான்சில் கொரோனா நிலைமை குறித்து ஆலோசிக்க திங்கட்கிழமை மாக்ரோன் ஜனாதிபதி தலைமையில் கூட்டம் நடைபெறும் என பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புத்தாண்டு தினத்தன்று பெரிய வெளிப்புற நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
பொது இடங்களில் மது அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டுக்கான பாரம்பரிய வானவேடிக்கைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.