இது கட்டாயம்.. பிரான்ஸில் புதிய விதிகள் அறிமுகம்!
பிரான்சில் சுகாதார மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாமாக்கப்பட்டுள்ளது.
இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வரும் நிலையில் மற்றொரு கொரோனா அலை ஏற்பட்டால் அது பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என அஞ்சப்படுகிறது.
புதிய விதிகள் படி, அனைத்து சுகாதார மற்றும் பராமரிப்பு இல்ல பணியாளர்கள், இல்ல உதவியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்றைய நிலவரப்படி குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சுமார் 84% ஊழியர்கள் இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 18 மில்லியன் மக்களுக்கு மூன்றாவது டோஸ் கொடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் இலக்கு வைத்துள்ளது என ஆகஸ்ட் மாத இறுதியில் பிரான்ஸ் அதிகாரி ஒரு கூறினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.