தற்போதுள்ள சூழலில் இதற்கு வாய்ப்பே இல்லை! பிரான்ஸ் அரசு திட்டவட்டம்
தற்போதுள்ள சூழலில் கொரோனா ஹெல்த் பாஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த எந்த திட்டமும் இல்லை என பிரான்ஸ் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் நான்கவாது அலையைத் தடுக்க கடந்த ஜூன் மாதம் பிரான்சில் கொரோனா ஹெல்த் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
கொரோனா ஹெல்த் பாஸ் என்றால் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டதற்கான அல்லது தொற்று பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவு அல்லது நோயிலிருந்து மீண்டதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.
பிரான்சில் பார்கள், உணவகங்கள், ரயில்கள், வணிக மையங்கள் மற்றும் பிற இடங்களில் நுழைவதற்கு கொரோனா ஹெல்த் பாஸை பிரான்ஸ் அரசு கட்டாயமாக்கியது.
இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பிரான்ஸ் அராங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Gabriel Attal செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, பிரான்சில் கொரோனா சுகாதார நிலைமை மேம்பட்டு வருகிறது.
அதேசமயம், கொரோனா நோய்த்தொற்றின் நான்காவது அலைகளைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட ஹெல்த் பாஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த பிரான்சுக்கு எந்த திட்டமும் இல்லை என Gabriel Attal திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.