பிரான்ஸில் அமுலுக்கு வந்த புதிய விதி! ‘சிவப்பு பட்டியலில்’ பிரபல நாடு சேர்ப்பு
பிரான்ஸ் அதன் கொரோனா பயண சிவப்பு பட்டியலில் அமெரிக்காவை சேர்த்துள்ளது.
அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவல் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பிரான்ஸ் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன் மூலம் ஜனவரி 2ம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரும் தடுப்பூசி போடாத பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி, பிரான்ஸ் பயணிக்க அவர்களுக்கு முக்கிய காரணம் இருக்க வேண்டும் மற்றும் பிரான்ஸ் வந்த பிறகு 48 மணிநேரத்திற்குள் (பிசிஆர் அல்லது lateral flow) பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பிரான்ஸ் சிவப்பு பட்டியலில்: ஆப்கானிஸ்தான், பெலாரஸ், போட்ஸ்வானா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஜார்ஜியா, மொரிஷியஸ், மலாவி, மால்டோவா, மாண்டினீக்ரோ, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா, செர்பியா, சுரினாம், தான்சானியா, துருக்கி, உக்ரைன், அமெரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் உள்ளன.
பிரான்ஸிலும் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது, கடந்த 4 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.