சில நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது பிரான்ஸ்
நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.
காரணம் என்ன?
சமீபத்தில் நைஜர் நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் முகாமிட்டிருந்த பிரான்ஸ் ராணுவத்தை வெளியேற்ற ஆளும் ராணுவ ஆட்சியாளர்கள் வற்புறுத்தினர். பிரான்சும் அதற்கு சம்மதித்துவிட்டது.
விடயம் என்னவென்றால், நைஜர் நாட்டை ஆளும் ராணுவ அமைப்புதான் புர்கினா பாசோ , மாலி ஆகிய நாடுகளையும் ஆள்கிறது.
AFP - OLYMPIA DE MAISMONT
ஆகவே, நைஜர் நாட்டை ஆளும் ராணுவ அமைப்புக்கும் பிரான்சுக்கும் பிரச்சினை உருவானதைத் தொடர்ந்து நைஜர் மட்டுமல்லாமல், புர்கினா பாசோ , மாலி ஆகிய நாடுகளின் மாணவர்களுக்கும் விசா வழங்குவதை பிரான்ஸ் நிறுத்திவிட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரான்சில் கல்வி கற்க திட்டமிட்டிருந்த தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |