பிரான்சில் அடுத்தாண்டு இது அவசியமானதாக மாறும்! சுகாதார அமைச்சர் முக்கிய தகவல்
பிரான்ஸ் சுகாதார அமைச்சர், ஒலிவர் விரன், மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும், இது மிகவும் எளிதானது என்று கூறியுள்ளார்.
கொரோனாவின் ஐந்தாவது அலையின் உச்சத்தில் பிரான்ஸ் உள்ளது. இதனால் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை(18.12.2021), வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் Olivier Véran, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், இது மிகவும் எளிதானது. எங்கள் நோக்கம் மக்களை காப்பாற்றுவது மட்டுமே தவிர, தண்டிக்கும் நோக்கம் இல்லை.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் உண்மையானது. ஆனால், தற்போது ஒமைக்ரான் பரவல் குறித்து சரியான புள்ளிவிவரங்கள் தங்களிடம் இல்லை. 310 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. அதிவேகமாக பரவுகிறது.
எனவே தடுப்பூசி ஒன்று தான் நம்மை இதில் இருந்து பாதுகாக்கும் ஆயுதம். இதுவரை 52 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் 5 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை போட்டுக் கொள்ளும் படி கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்போவதில்லை.
ஆனால் ஒமைக்ரான் பரவலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். வரும் ஜனவரி(2022) மாதம் இறுதியில் சுகாதார பாஸ் தடுப்பூசி அட்டையாக மாறுகிறது.
இது அதன் பின் மிகவும் அவசியமான ஒன்றாகவும் மாற வாய்ப்புள்ளது.
தடுப்பூசி அட்டை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.