பிரான்ஸ் மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது! சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்சில் கொரோனாவின் ஐந்தாம் அலை பெரும் உச்சத்தை தொட்டுள்ளதாக, நாட்டின் சுகாதார அமைச்சர் ஒலிவர் விரன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது.
இதற்கிடையில் தென் ஆப்பிரிக்கா ஓமைக்காரன் வைரஸ் பரவலும் பரவி வருகிறது. இந்நிலையில், பிரான்சில் கொரோனாவின் ஐந்தாம் அலை உச்சம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதார அமைச்சர் Olivier Véran வெளியிட்ட புள்ளி விவரங்களிடன் படி, கடந்த 24 மணிநேரத்தில் 47.000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலை மிக மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது என்று எச்சரித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில், கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 53,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுவே சமீபத்திய நாட்களில் அதிகபட்ச பாதிப்பாக இருந்தது.
இதற்கு முன் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி கொரோனா 2-வது அலையின் போது, சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது,