பிரான்ஸ் கொரோனாவின் 5-ஆம் நிலை உச்சத்தில் உள்ளது! சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர், நாம் தற்போது கொரோனாவின் ஐந்தாம் அலையின் உச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கடந்த சில நாட்களாகவே, புதிதாக 50000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கும் நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது இதன் எண்ணிக்கை 2500-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு வேறு உள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சர் Olivier Véran, உள்ளிருப்பு மற்றும் ஊரடங்கு போன்ற போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டால், இது கிறிஸ்துமஸ் விடுமுறையை பாதிக்கும்.
நவம்பர் மாத இறுதியில் 60 சதவீத தொற்று அதிகரிப்பும், டிசம்பர் முதல் வாரத்தில் 30 சதவீத தொற்று அதிகரிப்பும் பதிவாகியுள்ளது. இது ஐந்தாம் தொற்று அலையின் உச்சம் என்று எச்சரித்துள்ளார்.