பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! முடிவுக்கு வருமா சுகாதார பாஸ்? எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்
பிரான்சில் கொரோனா வைரஸ் அதிகரிக்க துவங்கியுள்ளதாக, சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. அதே போன்று இந்த வாரமும் பிரித்தானியாவில் கொரோனா பரவல் ஒரு சில பகுதிகளில் உச்சத்தை தொட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது பிரான்சில் கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளதாக சுகார அமைச்சர் Olivier Véran கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக் கிழமை ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பிரான்சில் கொரோனா பரவல் மீண்டும் பரவ துவங்கியுள்ளது. ஆனால், முன்பு போல் இல்லாமல், சிறிய அளவிலே வைரஸ் பரவல் இருந்து வருகிறது.
குறிப்பாக கொரோனாவின் புதிய தொற்று என்று குறிப்பிடும் அளவிற்கு இன்னும் வேகம் எடுக்கவில்லை, இருப்பினும் மக்கள் கவனமுடன் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சுகாதாரபாஸ் நடைமுறை முடிவுக்கு கொண்டு வருமா என்று கேட்ட போது, சுகாதார பாஸ் கொரோனா வைரஸுற்கு எதிரான கருவி, அதை முடிவுக்கு கொண்டு வருதற்கு இது சரியான நேரம் கிடையாது என்று கூறியுள்ளார்.