பிரான்சில் திடீரென்று அதிகரித்து வரும் கொரோனா தொற்று! சுகாதார செயலாளர் எச்சரிக்கை
பிரான்சில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக நாட்டின் சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இருந்த பிரான்ஸ், இப்போது தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு பின், அதில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறது.
இந்நிலையில், திடீரென்று பிரான்சில், கொரோனா பரவல் குறைவடையாமல் ஆறாவது நாளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது இந்த மாத இறுதிக்குள் பெரும் பாதிப்பை உருவாக்கும் என பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் எச்சரித்துள்ளார்.
தற்போது பிரான்சில் தேசிய அளவில் தொற்று விகிதமானது, 100,000 பேரிற்கு 22.8 வீதம் என அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில நாட்களிற்கு முன்னர் இது 20 வீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது.
இருப்பினும் பல மாவட்டங்களில் தேசிய தொற்று வீதத்தின் பல மடங்குகள் அதிகரித்து வருகின்றது.
தற்போது பிரான்சில் அதிகரித்துவரும் டெல்டா கொரொனா வைரசின் தொற்றினால் 20 வயது முதல் 29 வயதுடையவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சிக்குரிய தரவாக உள்ளது.