பிரான்சில் வெப்ப அலை: 1,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவு
பிரான்ஸ் கடந்த வாரம் கடுமையான வெப்ப அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24 முதல், சாதாரண நிலையை விட சுமார் 1,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக Public Health France தெரிவித்துள்ளது.
அதிகமாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். மொத்த உயிரிழப்புகளில் 85 சதவீதம் பேர் இந்த வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, பாரிஸ் மற்றும் அதன் புறநகரங்களை உள்ளடக்கிய Île-de-France பிராந்தியத்தில், வீட்டிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தனிமையில் வாழும் முதியவர்களுக்கு கூடுதல் பராமரிப்பு மற்றும் உதவிகள் அவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இன்னும் ஆரம்ப நிலை மதிப்பீடு மட்டுமே. உண்மையான உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்தது. பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடுமையான வெப்பத்தால் மருத்துவமனைகள் அழுத்தத்திற்கு ஆளானது.
இன்று (ஜூன் 28) சற்றே வெப்பம் குறைந்தாலும், இந்தச் சம்பவம் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |