தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா? பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரான்சில் மக்களை தடுப்பூசி போடும் படு கட்டாயப்படுத்த மாட்டோம் என்று நாட்டின் ஓலிவர் விரன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரான்சில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பிரான்சில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சர் Olivier Véran மக்களை தடுப்பூசி போடும் படு கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தமாட்டோம். இருப்பினும், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அனைத்துவித விழிப்புணர்வையும் மேற்கொள்வோம்.
தடுப்பூசி தொடர்பான தெளிவற்ற தன்மைகளை அகற்றுவோம். அதே சமயம் மருத்துவத்துறையில் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.