பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை! கொரோனா முதல் தடுப்பூசி போட்ட பின் நீங்கள் செய்யும் இந்த தவறு ஆபத்தில் முடியும்
பிரான்ஸ் மக்கள் கொரோனா முதல் தடுப்பூசி போட்ட பின் மிகவும் சாதரணமாக இருப்பதால், சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரான்சில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் படி வரும் ஜுன் மாதத்தில் 12 வயது முதல் 15 கொண்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பயனாக நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆனால், கொரோனாவிற்கான முதல் தடுப்பூசி போட்ட பின், மக்கள் மிகவும் அஜாக்கிரதையாக இருக்கின்றனர்.
அதாவது, முகக்கவசம் அணியாமல், கைகளை அடிக்கடி கழுவாமல் என இருக்கின்றனர். இதனால் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன், தற்போது இருக்கும் சூழ்நிலையில் வெளிப் புறங்களில் முகக்கவசம் என்பது கட்டாயம்,
அதை நீக்குவதற்கான நேரம் இன்னும் வரவிலை. முதல் கொரோனத் தடுப்பூசி போட்ட பின், பலர் சுகாதாரக் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர், இது மிகவும் ஆபத்தானது.
ஏனெனில் முதல் தடுப்பூசி குறைந்த அளவே பாதுகாப்பை வழங்கும், இரண்டாவது தடுப்பூசி, பத்து நாட்களுக்கு பின்னர் தான் பாதுகாப்பை கொடுக்கும்.
எனவே, மக்கள் நாம் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோமே என்று சாதரணமாக இருக்க வேண்டாம். கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறியுள்ளார்.