இந்தியப் பெண் ஒருவருக்கு பிரான்சின் உயரிய விருது
இந்தியப் பெண்மணி ஒருவருக்கு பிரான்ஸ் தனது உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.
பிரான்சின் உயரிய விருது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் (Indian Space Research Organization, ISRO) இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டப்பணியின் முன்னாள் இயக்குநரான V R லலிதாம்பிகா (V R Lalithambika) என்பவரே இந்த உயரிய விருதைப் பெற்றவர் ஆவார்.
லலிதாம்பிகாவுக்கு பிரான்சில் உயரிய விருதான Legion of Honour என்னும் விருது கடந்த செவ்வாயன்று வழங்கப்பட்டுள்ளது.
ISRO scientist Lalithambika
இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதரான Thierry Mathou, பிரான்ஸ் அரசின் சார்பில், லலிதாம்பிகாவுக்கு இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.
கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்த லலிதாம்பிகா, 2018ஆம் ஆண்டு, இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியபோது, பிரெஞ்சு தேசிய விண்வெளி ஏஜன்சியுடன் ஒருங்கிணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |