இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம்
இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்கான முயற்சிகளில் பங்கேற்று தன் உயிரையே தியாகம் செய்த இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவரை கௌரவிக்கும் வகையில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது பிரான்ஸ் அரசு.
இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம்

இரண்டாம் உலகப்போரின்போது போரில் பெண்களின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாகும்.
அவ்வகையில், ஒரு உளவாளியாக தன பங்கை ஆற்றிய இந்திய வம்சாவளிப்பெண், நூர் இனாயத் கான்.
இந்திய தந்தைக்குப் பிறந்த நூர், பிரித்தானிய ராணுவத்தில் இணைந்து, நாஸி ஜேர்மனியால் பிடிக்கப்பட்ட பிரான்சுக்குள் மாறுவேடங்களில் நுழைந்து, உயிரைப் பணயம் வைத்து துணிச்சலுடன் அங்கிருந்து பிரித்தானியாவுக்கு ரேடியோ செய்திகள் அனுப்பும் ஆபத்தான பணியை மேற்கொண்டவர்.
வெறும் 30 வயதே ஆன நிலையில், 1944ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி, நாஸிக்களிடம் பிடிபட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டார் நூர்.

அவரது கடைசி வார்த்தைகள் ’Liberté’ அதாவது, விடுதலை என்பதாகும்.
இந்த ஆண்டுடன் இரண்டாம் உலகப்போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரான்ஸ் தனது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுடைய தபால்தலைகளை வெளியிட்டுள்ளது.

அப்படி பிரான்ஸ் அரசால் கௌரவிக்கப்பட்டவர்களில் ஒரே இந்திய வம்சாவளிப் பெண் நூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |