செப்டம்பர் மாதம் முதல் பிரான்ஸ் இதை தொடங்கும்! இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஜனாதிபதி மாக்ரோன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரான்சில் கொரோனா தடுப்பூசியின் 3வது டோஸ் போடப்படும் என்பதை ஜனாதிபதி மாக்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மாக்ரோன் இதை உறுதி செய்தார்.
வீடியோவில் பேசிய மாக்ரோன், பிரான்சில் உள்ள முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் 3வது டோஸ் தேவை.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் 3வது டோஸ் போடும் பணியை பிரான்ஸ் தொடங்கும் என மாக்ரோன் கூறினார்.
முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு 3வது டோஸ் அவசியமாக இருக்கும், ஆனால் அனைத்து வயதினருக்கும் 3வது டோஸ் போட வேண்டிய உடனடி தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
இதே வேகத்தில் உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தை தொடர குறைந்தபட்சம் அக்டோபர் வரை 3வது டோஸ் போடும் பணிகளை நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு நேற்று அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 60 வயது மேற்பட்டவர்களுக்கு எதிர்ப்புசக்தி அதிகரிக்க 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியை இஸ்ரேல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.