பிரான்சில் பரவிவரும் வைரஸ் தொற்று: நடவடிக்கையில் இறங்கியுள்ள அதிகாரிகள்
தெற்கு பிரான்சில் சிக்குன்குன்யா என்னும் வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
பரவிவரும் வைரஸ் தொற்று
சமீபத்தில், சீனாவில், சுமார் 10,000 பேர் சிக்குன்குனியா என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
அதைத் தொடர்ந்து, சுற்றுலா செல்வோர் கொசுக்கடியிலிருந்து தப்பும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், தெற்கு பிரான்சிலுள்ள Vitrolles என்னுமிடத்தில், 33 பேருக்கு சிக்குன்குன்யா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, சிக்குன்குன்யாவைப் பரப்பும் டைகர் கொசுக்களைக் கொல்லும் நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.
தோட்டங்களில் கொசுக்களை ஒழித்துக்கட்ட பூச்சி மருந்து அடிக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகள் அருகே தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த சிக்குன்குன்யா வைரஸ் தொற்று, திடீர் காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலியை ஏற்படுத்தும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பலவீனமாக உணர்வார்கள்.
இந்த தொற்று சில நாட்கள் முதல், சில வாரங்கள் வரை நீடிக்கக்கூடும். அமெரிக்க நோய்த் தடுப்பு மையம், இந்த சிக்குன்குனியா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |