மனைவியை சீரழிக்க ஆண்களை பணிக்கு அமர்த்திய கணவர்: பிரான்ஸ் நாட்டை உலுக்கிய சம்பவம்
மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய வைத்த பிரான்ஸ் நாட்டு ஓய்வூதியதாரர் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார்.
நாட்டை உலுக்கிய சம்பவம்
பிரான்ஸ் நாட்டில் 71 வயது ஓய்வூதியம் பெறும் கணவர் தன்னுடைய 72 வயது மனைவிக்கு போதைப்பொருள் வழங்கி அந்நியர்களை கொண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முக்கிய சந்தேக நபரான 71 வயதான முன்னாள் அரசு மின் நிறுவன EDF ஊழியரான கணவருடன் சேர்த்து 50 பேர் திங்கட்கிழமை தெற்கு நகரான Avignon-லில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
72 வயது பெண்ணுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தில் 26 முதல் 74 வயது வரையிலான ஆண்கள் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை அவர் அறிந்து இருக்கவில்லை என்றும், அவர் தீவிரமான போதைக்குள் தள்ளப்பட்டு இருந்ததாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 92 பாலியல் துஷ்பிரயோகங்கள் 72 ஆண்களால் நடந்து இருப்பதாகவும், அதில் 51 பேர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திறந்த விசாரணை
பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பப்படி அனைத்து விசாரணைகளும் பகிரங்கமாக இருக்கும் என்று தலைமை Roger Arata உத்தரவிட்டு இருப்பதாக பெண்ணின் வழக்கறிஞர்களில் ஒருவரான Stephane Babonneau தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கின் மூலம் பரந்த அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறார், அத்துடன் தனக்கு என்ன நடந்ததோ அது மீண்டும் யாருக்கும் நடந்துவிட கூடாது என்றும் விரும்புகிறார் என Babonneau தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய 3 குழந்தைகளுடன் நீதிமன்றத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |