பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் செல்வாக்கு குறைந்தது! வெளி வரும் முக்கிய தகவல்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் செல்வாக்கு தன்மை மக்களிடம் குறைத்து வருவதாக ஆய்வு விவரங்கள் கூறுகின்றன.
உலகதலைவர்களில் பிரபலமானவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானும் ஒருவர், இந்நிலையில்,கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜனாதிபதியான மேக்ரானுக்கு 3 புள்ளிகளும் பிரமருக்கு 4 புள்ளிகளும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்களுக்கான ஆய்வு கூறுகிறது.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் செல்வாக்கு 38 புள்ளிகளுனுடம், பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸின் செல்வாக்கு 36 புள்ளிகளுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், ஜனாதிபதின் செயற்பாடுகளில் 59 சதவீதமான மக்கள் திருப்தியை கொடுத்துள்ளதாகவும், பிரதமரின் செயற்பாடுகளில் 58 சதவீதம் பேர் திருப்த்தி அடைவதாகவும் கூறியுள்ளனர்.