இந்த நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இனி இது கட்டாயம்.. இவர்களுக்கே மட்டுமே நட்டிற்குள் நுழைய அனுமதி! பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் 24 முதல் பிரேசிலில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கடுமையான 10 நாள் தனிமைப்படுத்தலில் இருக்க பிரான்ஸ் உத்தரவிடும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க மாவட்டத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு பரவாமல் தடுக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரம் பிரேசிலிருந்து வரும் மற்றும் பிரான்ஸிலிருந்து பிரேசிலுக்கு புறப்படும் அனைத்து விமானங்களையும் பிரான்ஸ் ரத்து செய்தது.
இந்த நடவடிக்கை ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 24 முதல், பிரான்சில் வசிக்கும் அல்லது பிரான்ஸ் அல்லது ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
பிரான்ஸ் வந்தவுடன் அனைத்து பயணிகளுக்கும் அரசாங்கம் 10 நாள் தனிமைப்படுத்தலை விதிக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது, மேலும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்த சரியான ஏற்பாடுகளை செய்துள்ளார்களா என்பதை விமான பயணத்திற்கு முன்னும் பின்னும் அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.
தனிமைப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்த காவல்துறையும் பயன்படுத்தப்படும். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அங்கீகரிக்கப்பட்ட பயணிகள் 36 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்ற பி.சி.ஆர் சோதனையை முடிவை வழங்க வேண்டும்.
மற்ற கொரோனா வைரஸ் வகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள அர்ஜென்டினா, சிலி மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பும் மக்களுக்கும் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் இதே நடவடிக்கைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையில் பிரான்சின் வெளிநாட்டுத் துறையான பிரெஞ்சு கயானாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் 10 நாள் தனிமைப்படுத்தல் விதிக்கப்படும் என பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.