பிரான்சில் பிரித்தானியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தை சாராதவர்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகள் அறிமுகம்
பிரித்தானியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாட்டு குடிமக்களுக்கு, பிரான்ஸ் புதிய எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் அனைவரும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்கள் பிரான்ஸ் வந்ததும் ஏழு நாட்களுக்கு தங்களைதனிமைப்படுத்திக் கொள்வதாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும், இரண்டாவதுமு றையாக பி.சி.ஆர் முறையில் கொரோனா சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கப்போகிறோம் என்று கூறியுள்ள Jean Castex,திங்கட்கிழமை முதல் (ஜனவரி 18), ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் அனைவரும், புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், எல்லை தாண்டி பணிபுரிவோர் மற்றும் பிற அத்தியாவசிய பணியாளர்களுக்கு தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை காரணம் காட்டி எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், உண்மையில், எல்லையின் சில பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் சட்ட விரோத புலம்பெயர்தலை தடுப்பதற்காகவும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரான்ஸ் அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.