கிராமப்புற மக்களுக்காக பிரான்ஸ் அறிமுகம் செய்யும் மினி ரயில்கள்
கிராமப்புற மக்களுடைய வசதிக்காக, பிரான்ஸ் அரசு மினி ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளது.
கிராமப்புற மக்களுக்காக மினி ரயில்கள்
கிராமப்புற மக்களுடைய வசதிக்காக, பிரான்ஸ் அரசு அறிமுகம் செய்ய இருக்கும் இந்த ரயில்கள் Draisy' ரயில் என அழைக்கப்படுகின்றன.
ஒரு பேருந்தின் அளவே உள்ள இந்த மினி ரயில்கள் பேட்டரி மூலம் இயங்கக்கூடியவையாகும்.
ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ரயிலில் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும்.
முதன்முறையாக, Strasbourg நகரில், புதன்கிழமையன்று இந்த மினி ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன் சோதனை முயற்சி வெற்றி பெறும் நிலையில், நாடு முழுவதும் இந்த மினி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மிகக்குறைவான ரயில் சேவையே உள்ள பல பிரெஞ்சு கிராமங்களில் இந்த சேவை நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |