பிரான்சில் இன்று முதல் எங்கெல்லாம் செல்வதற்கு ஹெல்த் பாஸ்போர்ட் கட்டாயம்?
பிரான்சில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நான்காவது அலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, மக்கள் சில இடங்களுக்குச் செல்ல இன்று முதல் ஹெல்த் பாஸ்போர்ட் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கு எப்போது இந்த ஹெல்த் பாஸ்போர்ட் தேவை என்பதைப் பார்க்கலாம்...
The pass sanitaire என்று அழைக்கப்படும் இந்த ஹெல்த் பாஸ், அதை வைத்திருப்பவர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டார், அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டுவிட்டார், அல்லது கடந்த 48 மணி நேரத்துக்கு முன் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரமாக வழங்கப்படுகிறது.
எங்கெல்லாம் இந்த ஹெல்த் பாஸ் தேவை? இன்று (ஜூலை 21) முதல், 50க்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்படும் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், அதாவது சினிமா தியேட்டர்கள், நூலகங்கள், தீம் பார்க்குகள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகிய இடங்களுக்குச் செல்ல ஹெல்த் பாஸ் அவசியம்.
ஆகஸ்ட் 1 முதல் இந்த விதி மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த இடங்களில் பணி செய்வோர் ஆகத்து 30க்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஹெல்த் பாஸ் அனுமதிக்கப்படும் இடங்களில் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி மாஸ்க் அணியத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.