பிரித்தானியா உடனான எல்லைகளை பிரான்ஸ் மூட வேண்டும்! நாட்டின் முக்கிய தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை
புதிய உருமாறிய கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் பிரித்தானியா மற்றும் பிற நாடுகளுடனான எல்லைகளை மூடுவது குறித்து பிரான்ஸ் பரிசீலிக்க வேண்டும் என்று அந்நாட்டு தொற்றுநோயியல் நிபுணரும் அரசாங்க ஆலோசகருமான Arnaud Fontanet எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் தொற்றுநோயியல் நிபுணரும் அரசாங்க ஆலோசகருமான Arnaud Fontanet கூறியதாவது, குறிப்பாக பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாடுகளுடனான எல்லைகளை நாம் மூட வேண்டுமா என்பதை ஆலோசிப்பது முக்கியம்.
இது நிச்சயமாக முக்கிய நிகழ்வுக்கான ஒரு தொடக்கமாகும். இதுதொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் விஞ்ஞான கவுன்சிலுக்கு இல்லை, ஆனால் நாங்கள் பிரச்சினையை எழுப்ப விரும்புகிறோம்.
பிரான்சின் மத்திய தரைக்கடல் துறைமுகமான Marseille மற்றும் ஆல்ப்ஸில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுவகை கொரோனா மிகவும் தீவிரமானது, ஆனால் தற்போது அதன் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர, மார்ச் மாத இறுதிக்குள் பிரான்ஸ் 10 முதல் 15 மில்லியன் மக்களுக்கும், ஜூன் இறுதிக்குள் 25 முதல் 30 மில்லியன் மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் Arnaud Fontanet கூறினார்.
மே