அமெரிக்கா மீது பிரான்ஸ் கடுங்கோபம்: விவரம் செய்திக்குள்
நைஜர் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்த விடயம், அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையில் உரசலை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா துரோகம் செய்துவிட்டது
கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 26ஆம் திகதி, நைஜர் நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது, ஜனாதிபதியாக இருந்த Mohamed Bazoum கைது செய்யப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
உணவோ, மின்சாரமோ, மருந்துகளோ இல்லாமல் பல நாட்களாக அவர்கள் மோசமான நிலையில் சிறையில் வாடிவருகிறார்கள்.
நைஜர் நாட்டுக்கு தனது பிரதிநிதிய அனுப்பிய அமெரிக்கா
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து பிரான்ஸ் நைஜர் நாட்டுக்கு அளித்துவந்த நிதியுதவிகளை நிறுத்திவிட்டது. அத்துடன், Economic Community of West African States (ECOWAS) என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான அமைப்பு, நைஜர் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்காக படைகளை களமிறக்க ஒப்புதலளித்துள்ளது.
ஆக, ராணுவ நடவடிக்கை எடுத்தாவது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள Mohamed Bazoumஐ மீண்டும் பதவியிலமர்த்த பிரான்ஸ் திட்டமிட்டுவரும் நிலையில், அமெரிக்கா, deputy secretary of state என்னும் பொறுப்பிலிருக்கும் Victoria Nulland என்பவரை நைஜர் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைத்துள்ளது.
இந்த விடயம் பிரன்சைக் கோபமடைய வைத்துள்ளது. நாம் அமெரிக்கா என்ன செய்யும் என்று நினைத்தோமோ, அதற்கு நேர் எதிராக அந்த நாடு செய்துள்ளது, இப்படிப்பட்ட கூட்டாளிகள் இருக்கும் நிலையில், நமக்கு வேறு எதிரிகளே வேண்டாம் என பிரான்ஸ் தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |