பிரான்சில் சூழ்நிலை சரியாக இல்லை! கொரோனாவுடன் நாட்டிற்குள் நுழைந்தால் இது தான் கதி: அடுத்தடுத்த எச்சரிக்கை அறிவிப்பு
பிரான்சில் கொரோனா வைரஸ் சூழ்நிலை சரியாக இல்லை என்று நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இப்போது பிரான்சை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, Nièvre, the Aube மற்றும் Rhône ஆகிய மாவட்டங்களுக்கு, நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார். இந்த மூன்று மாவட்டங்களுக்கும் நான்குவார காலம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 16 மாவட்டங்களுக்கு இதே போன்று ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது இந்த மூன்று மாவட்டங்களும் இதில் இணைந்துள்ளது.
ஏனைய மாவட்டங்கள் போல், இந்த மூன்று மாவடங்களிலும், ஆறுபேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை, 30 கிலோமீற்றர்களுக்குள் மட்டுமே பயணிக்க அனுமதி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தலைநகர் பாரிஸ் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் வருகை தருவோர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இல் து பிரான்சின் விமான நிலையங்கள் வழியாக வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.