பிரான்சை விட்டுவிட்டு இந்தியாவில் வாழ வந்திருக்கும் பெண்: அவர் கூறும் காரணம்
பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், பிரான்சை விட்டுவிட்டு இந்தியாவில் வாழ வந்திருக்கிறார்.
இந்தியாவில் வாழ வந்திருக்கும் பிரெஞ்சுப் பெண்
இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் லியோனி என்னும் பிரான்ஸ் நாட்டுப்பெண், பிரான்சைவிட இந்தியா பாதுகாப்பானது என்கிறார்.
நான் இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தங்கியிருக்கிறேன். இந்தியாவின் தங்கியிருப்பதை நான் விரும்புகிறேன் என்கிறார் அவர்.
இங்கு சாலையில் தனியாக நடந்து செல்லும்போது யாரும் வந்து எந்த தொந்தரவும் செய்வதில்லை என்று கூறும் அவர், தான் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி, வரலாறு மற்றும் புவியியல் கற்பிப்பதாகவும், இங்குள்ள மாணவர்களை தனக்குப் பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
லியோனியை வெளிநாட்டவர் ஒருவர் நேர்காணல் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், கனடாவை விட இந்தியா பாதுகாப்பானது என்கிறார் ஒருவர்.
ஆனாலும், இந்தியர்கள் சிலரே இந்தியாவிலும் சில பிரச்சினைகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள். மொத்தத்தில் இணையவாசிகள் அந்த வீடியோ குறித்து கலவையான கருத்துக்களை வெளியிட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |