இந்தியாவில் கொரோனா நோயாளிகளை பாதித்த கருப்பு பூஞ்சையால் பிரான்சுக்கு ஆபத்து ஏற்படுமா?
இந்தியாவில் கொரோனா நோயாளிகளை பாதித்த கருப்பு பூஞ்சை ஏற்கனவே பிரான்சில் உள்ளது. ஆனால், அதனால் பிரான்சுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு குறைவு என்றாலும் பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கிறார் நிபுணர் ஒருவர்.
நீரிழிவு மற்றும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகும்போது அவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சையால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகையவர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டாலும், அடுத்த சில வாரங்களுக்கு பிரச்சினைக்குரிய இடங்களை தவிர்ப்பது நலம்.
உதாரணமாக தோட்டவேலை மற்றும் மட்கிய உரத்தை பயன்படுத்துதல் ஆகிய வேலைகளை தவிர்ப்பது நல்லது என்கிறார் பேராசிரியர் Lortholary.
ஆனால், இந்த கருப்பு பூஞ்சை பிரான்சில் பரவ வாய்ப்பேயில்லை என்று கூறும் அவர், இதைக் குறித்து மக்களை அதிகம் பயமுறுத்தாமல் இருப்பது அவசியம் என்கிறார்.
நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறும் அவர், பல்வேறு அமைப்பு மற்றும் கலாச்சார காரணிகள் காரணமாக நாம் இந்தியாவிலிருப்பது போன்ற அளவிலான கருப்பு பூஞ்சை தொற்றை காணமாட்டோம் என்கிறார்.