பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறை!
பிரான்சில் கோவிட் உறுதி செய்யப்பட்டோருக்கான தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்று உறுதி செய்யப்படும் முழு தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் 10 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்படும் என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் (Olivier Veran) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த வாரம் பணியாளர்கள் பற்றாக்குறையால் தொழில்களில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க தனிமைப்படுத்தல் காலத்தை பிரான்ஸ் குறைத்தது.
அமெரிக்கா போன்ற பிற நாடுகளைப் பின்தொடர்ந்து பிரெஞ்சு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தனிப்படுத்தல் தொடங்கி 5-வது நாளில் சோதனை செய்யப்பட்டு, அதில் எதிர்மறையான முடிவைப் பெற்றால், அந்த நபர் தங்கள் தனிப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.
ஆனால், தடுப்பூசி போடப்படாதவர்கள் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கும், 7 நாளில் சோதனை செய்து எதிர்மறையான முடிவைப் பெற்றால் உடனடியாக தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது, என்று ஆலிவர் வேரன் கூறினார்.
இந்த நிலையில், கடுமையான ஊரடங்கு விதிகளை மீண்டும் விதிக்கப்படாவிட்டால், இந்த புதிய Omicron வகை கோவிட் தொற்றை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தொற்றுநோய் வெடித்ததில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்த உலகின் 6-வது நாடாக பிரான்ஸ் ஆனது.
பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள், கடந்த 24 மணி நேரத்தில் 219,126 புதிய உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளனர், இது தொடர்ச்சியாக நான்காவது நாளாக நாட்டில் 200,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது.